Friday, October 11, 2013



மானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமிய பண்புகள் என்றும் இரண்டாக வகுக்கலாம். 

மனுஷ்ய பண்புகள் உலக வாழ்வின் அடைவுகளுக்கு காரணியாக அமையும். இஸ்லாமிய பண்புகள் மனுஷ்ய பண்புகளை நெறிப்படுத்தி, நன்மையின் பால் மாத்திரம் வழிகாட்டும். அவ்வாறே சீர்கேட்டிலிருந்து பாதுகாத்து, தூய்மையான மனித நாகரிகத்தை கட்டியெழுப்ப உதவும். எனவே தான் இறை தூதரின் இலக்கு ஒழுக்க நெறியை பூரணப்படுத்துவதாய் அமைந்தது. 

 
பொதுவாக இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாடு நான்கு கட்டங்களை படிமுறையாக கொண்டிருக்கும். 

1. ஈமான் : 
அல்லாஹ் பற்றிய ஆழ்ந்த விசுவாசமும் நம்பிக்கையும். 

2. இஸ்லாம்: 
விசுவாசத்தின் வெளிப்பாடாக அமைந்த செயற்பாடுகள்
3. தக்வா : 
அல்லாஹ் பற்றிய பயம். அவனுக்கு முன்னால் வகை கூற வேண்டும் என்ற எண்ணம்.

4. இஹ்ஸான்: 
அல்லாஹ் மீது கொண்ட அளவிலாத இறை நேசத்தின் காரணமாக முழுமையான அர்ப்பண சிந்தையுடன் வாழ்தல்.



Ash Sheikh Mohamed Fakeehudeen





https://www.facebook.com/islamicarticle

0 comments:

Post a Comment