Wednesday, October 29, 2014



இஸ்லாமிய சஹாபா பெண்மணிகள்

ஆயீஷா (ரலி):

  1. ஆயீஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் யுத்த களத்திற்குச் சென்றார்கள்
  2. யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தார்கள்.
  3. நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் ஹதீஸ்களை கற்பிக்கும் மிகச் சிறந்ததோர் ஆசிரியராக (முஹத்திஸா) இருந்துள்ளார்கள்.


சுமையா (ரலி):

சுமையா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்று கொண்ட ஒரு பெண்.


அஸ்மா (ரலி) அன்ஹா, உம்முல் பழல் (ரலி), ஹன்ஸா(ரலி):

போன்ற ஸஹாபாப் பெண்களின் வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். அவர்கள் மிகச்சிறந்த பரம்பரையொன்றை வளர்த்து அப்பிள்ளைகளை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தார்கள்.


களப் போராளிகளாய் முஸ்லிம் சஹாபாப் பெண்மணிகள்:

மார்க்கத்தை பாதுகாப்பதில் பெண்களும் மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை எம்மால் மறந்துவிட முடியாது. ஒன்றில் அவர்கள் ஆண்களின் தியாகத்தின் பின்னணியில்  இருந்திருப்பார்கள். அல்லது அவர்களே மிகப் பெரும் தியாகிகளாக இருந்திருப்பார்கள்.

முதலாவது ஹிஜ்ரத்தான அபீஸீனியாவுக்கான ஹிஜ்ரத்தில் ஆண்கள் 83 பேருடன் 19 பெண்களும் கலந்து கொண்டனர். குறைஷி காபிர்கள் இஸ்லாத்தைத் தீர்த்து கட்டும் நோக்கில் முஸ்லிம்களை அபூதாலிப் கணவாயில் போட்டு 3 வருடங்கள் அவர்களுடன் இருந்த தொடர்பை முழுமையாக துண்டித்துக் கொண்டனர். அங்கு முஸ்லிம்கள் அனைவரும் உண்ண உணவோ தாகத்தை தீர்க்கும் நீரோ இன்றி அதிக சிரமப்பட்டனர். அந்த சோதனையால் அதிகம் சிரமப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.


உம்மு ஸலமா (ரலி):

ஹிஜ்ரத் என்ற 300 கி.மீ தொலைவான நீண்ட பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த பாதைகள், இவற்றை முஸ்லிம் பெண்கள் கடந்து சென்று முஹாஜிரா என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா? உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா? கர்ப்பிணித் தாய்மார்கள், பால்குடி தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இம்மாபெரும் சோதனையை எதிர்கொண்டார்கள்.


உம்மு அமாரா (ரலி):

உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை தாக்க வந்து கொண்டிருந்த இப்னு கமிஆவை தடுத்து நிறுத்தி அவனுடன் போராடியதில் உம்மு அமாரா (ரழி) அவர்களது உடலில் 12 காயங்கள் ஏற்பட்டன. இப்போரில் ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸுலைம் (ரழி) போன்றோர் தொடர்ந்தும் காயப்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்து பராமரித்துக் கொண்டிருந்தனர். பலமுறை தண்ணீர் நிரப்பி வந்து படைவீரர்களின் தாகத்தை தணிக்க உதவினர்.


உம்மு ஸல்மா (ரலி):

அவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த முஃமீன்களை அழைத்து ரோஷமூட்டி யுத்தத்தில் ஈடுபடச் செய்தார்கள். இப்படி அன்றைய முஸ்லிம் பெண்கள் நல்ல தாய்மார்களாக, நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்துள்ளதுடன் அவர்களில் பலர் சமூக களங்களிலும் தம்மால் இயலுமான பங்களிப்பை செய்திருப்பதை காண முடியும்.



நோக்கங்களும் இலக்குகளும்:

  • அல்லாஹுத் தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை.
  • மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான்.
  • அல்லாஹுத் தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான்.

விசுவாசம் கொண்ட ஆண்களும் விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியையும் செய்வார்கள்.

எனவே பெண்ணும் அல்லாஹுத் தஆலா ஏவிய இப்பணியை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாள். எனவே அவளை தடுக்கும் உரிமை கணவனுக்கோ, தந்தைக்கோ, சகோதரனுக்கோ கிடையாது. எனினும் பெண்ணின் வீடு என்ற அதிமுக்கியமான தஃவா களத்தை ஒழுங்குபடுத்திய பின்னரே சமூகம் என்ற களத்திற்குப் பிரவேசிக்க வேண்டும்...

அதற்காக வீட்டினுள் முடங்கி கிடப்பதை ஒரு போதும் வரவேற்கவில்லை...


~ மஸ்கர் ஸக்கரியா ~

0 comments:

Post a Comment