Wednesday, October 29, 2014






இவர் தவறு செய்கிறாரா? என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவரின் அனைத்து நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடாது. பொதுவாக எல்லாரையும் நல்லவராகவே எண்ண வேண்டும். தவறு செய்திருக்க முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49 : 12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். (நூல்: புகாரி 5143)

பிறர் தவறு செய்து அது நம்முடைய பார்வைக்கு வருமானால் நேரடியாக அவரை சந்தித்து அவர் செய்யக்கூடிய பாவத்தின் தண்டனையை பற்றி நாம் அவருக்கு விளக்க வேண்டும். மறுமையை பற்றி அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் அவரின் பாவத்தை வெளிப்படுத்தினால் இதனால் ஏற்பட்கூடிய விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.

"தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்" அல்லது "தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்" யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,

நூல்கள் : புகாரி 7042), திர்மிதீ 1673)

நன்றி : ~ Athila Parsa Madarasi ~

0 comments:

Post a Comment