Sunday, November 30, 2014


ஒரு மனிதன் ஏற்று விசுவாசித்த கொள்கைக்கு அவன்தான் சிறந்த முதல் சான்றாகும். அது எந்தக் கொள்கையாக இருந்தபோதிலும் சரியே.
ஓவ்வொரு மனிதனும் தனது நாவால் பேசிக் கொண்டிருப்பது அவனது கொள்கையல்ல. அது பேச்சை மெருகூட்டுவதற்காக இரவல் வாங்கிய கொள்கையாக இருக்கலாம். அல்லது எவரையாவது திருப்திப்படுத்தும் நோக்கில் அவன் பேசுகின்ற கொள்கையாக இருக்கலாம். ஒரு மனிதனின் உன்மையான கொள்கை அவன் பேசிக் கொண்டிருப்பதல்ல. மாறாக, அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே அவனது கொள்கையாகும். பேச்சைக் கடன் வாங்கலாம், வாழ்க்கையை கடன் வாங்க முடியாது.

காரணம், கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு இறுக்கமானது; பிரிக்க முடியாதது. ஒரு மனிதனது கொள்கையை அவனது வாழ்க்கையிலிருந்தோ அவனது வாழ்க்கையை அவனது கொள்கையிலிருந்தோ பிரிக்க முடியாது. பேச்சு அவ்வாறானதல்ல. அதனை அவன் கொண்ட கொள்கையிலிருந்து பிரித்துவிடலாம்; வேறுபடுத்தலாம். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில்லாமலும் இருக்கலாம்.
அன்புச் சகோதரர்களே! எனதும் உங்களதும் வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். அது எந்தக் கொள்கைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது என்பதை ஒரு கனம் சிந்திப்போம். நாம் ஏற்று விசுவாசித்த கொள்கை நாம் பேசிக் கொடிருக்கும் கொள்கையல்ல. மாறாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே எமது கொள்கையாகும். அந்த வாழ்க்கை எந்தக் கொள்கையின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இறை விசுவாசம் (ஈமான்) ஒரு மனிதனது உள்ளத்தில் இருந்தால் அது நிச்சயம் அவனது வாழ்க்கையாக மாறித்தான் ஆக வேண்டும்… தவறினால் அவனது உள்ளத்தில் இருப்பது இறை நம்பிக்கையல்ல...


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

0 comments:

Post a Comment