Tuesday, June 9, 2015



புறம் என்பதன் அர்த்தத்தை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தும்போது:

'புறம் பேசுதல் என்றால் என்ன என்று நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் (தமது தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் எனக் கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுதல் என்பது) நீ உன் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள்.

நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா?
எனக் கேட்கப்பட்டபோது.

அதற்கவர்கள்,
நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய்.
நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறிவிட்டாய் எனக் கூறினார்கள்'.   (முஸ்லிம்)

0 comments:

Post a Comment